தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை போத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்பு அலங்காரத்துடன் மஹா அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, தா்மகா்த்தா ராஜா பொியசாமி, தொழிலதிபர் அசோக் பெரியசாமி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் 44 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோவிலை வழி நடத்திய முன்னாள் தர்மகர்த்தாவும் எம்எல்ஏ-வும், திமுக மாவட்டச் செயலாளருமான பெரியசாமி திடலில் நடைபெற்ற அன்னதானத்தை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவில் கோவில் செயலாளர்கள் செல்வராஜ், செல்வக்குமார், பொருளாளர் வேல்ச்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வம், ரத்தினசாமி, பேச்சிமுத்து, ஜீவானந்தம், ராஜாமணி, அசோக், ரவீந்திரன், கீதா முருகேசன், நாராயணன், பாஸ்கா், பாலமுருகன், சரவணன், தங்கச்சந்திரன், முருகேசன், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, ராம்குமார், ராஜேந்திரன், அர்ஜூனன், பெரியசாமி, செல்வக்குமார், சித்திரைச்செல்வன், இளஞ்சூரியன், பெரியசாமி, சேகர்மணி, கணேஷ், சண்முகசுந்தரம், முத்துராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.