கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் 5-ஆவது வார்டில், 15-ஆவது மானிய நிதிக்குழுத் திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தைப் பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி இராஜதுரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கயத்தாறு பேரூராட்சி மக்களின் பயன்பாட்டிற்காகப் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 15-ஆவது மானிய நிதிக்குழுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடான ரூ.7 லட்சம் செலவில் 5-ஆவது வார்டு பகுதியில் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுப் பணிகள் நிறைவடைந்தன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவில், கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி இராஜதுரை கலந்துகொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கயத்தாறு பேரூராட்சி மன்ற உறுப்பினரும் கவுன்சிலருமான கோகிலா, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் சுற்றுச்சூழல் அணித் துணை அமைப்பாளர் இராஜதுரை, முன்னாள் கவுன்சிலர் சேக்தாவூது, தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் கார்த்திக் மற்றும் வேல்சாமி, மணி, கருப்பசாமி, ஊர் நாட்டாண்மை மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

