இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஊழியர் கூட்டம் காயல்பட்டினம் சதுக்கை தெருவில் உள்ள அலுவலகத்தில் நகர தலைவர் எம்.எஸ். நூஹ் ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது. பீ.எஸ்.என். அஹ்மத் ஜரூக் கிராஅத் ஓதினார். நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ். அபூசாலிஹ் வரவேற்றார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் கூட்ட அறிமுக உரையாற்றினார்.

அண்மையில் காலமான - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னோடிகளின் மறைவுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட, அவர்களின் மக்ஃபிரத் எனும் பாவப் பிழைபொறுப்புக்காக, தகவல் தொழில்நுட்ப அணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் ஹாஃபிள் எஸ்.கே. சாலிஹ் துஆ பிரார்த்தனை செய்தார்.

கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, முன்னிலை வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் காயல் மகபூப், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பு அணியான முஸ்லிம் மாணவர் பேரவை எம்.எஸ்.எஃப். தென் மண்டலப் பயிலரங்கத்தை, நிகழும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று காயல்பட்டினத்தில் நடத்திட மாநில தலைமையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூட்டத்தில் அறிவித்த மாநில பொதுச் செயலாளர், அனைவரும் வியக்கும் வகையில் ஏற்பாடுகளை எந்தக் குறையும் இல்லாமல் நிரப்பமாகச் செய்திட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டதோடு, தென்மண்டலப் பயிலரங்கத்திற்கான இலச்சினையையும் வெளியிட்டார்.

அயலக அணி மாநில துணைத்தலைவர் என்.டீ. முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ நன்றி கூற, நகர நிர்வாகக் குழு உறுப்பினர் கே.எம். சாமு ஷிகாபுத்தீன் துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் நிறைவுற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கத்தினரான மாவட்டத் துணைத் தலைவர் அம்பா ஜாஃபர், ஜப்பான் உதுமான், பிரபு முஹம்மத் ஃபாரூக், எம்.ஏ. முஹம்மத் ஹஸன், எம்.எச். அப்துல் வாஹித், கீ. ஷாஹுல் ஹமீத், ஏ.ஆர். முஹம்மத் அபூபக்கர், தோல்சாப் முஹம்மத் சூஃபீ, முஜீபுர் ரஹ்மான், இதில் திரளாகக் கலந்து கொண்டனர்