தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, அனைத்துப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்ற ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று (26.10.2026) நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மண்டலப் பொது மேலாளர் ஏ.ஆர். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில், அரசு போக்குவரத்துக் கழகத்தின் உயர் அலுவலர்கள், நிர்வாகப் பணியாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்துப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.