சுதந்திரப் போராட்ட வீரர் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவருக்கு இணையதளம் வாயிலாகப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "தென்னகத்திலிருந்து வெடித்து எழுந்த சுதந்திர முழக்கத்துக்குச் சொந்தக்காரர், ஆங்கிலப் பேராதிபத்தியத்துக்கு எதிராக மேலைக்கடலில் கப்பல் விட்டு விடுதலை வேட்கை என்னும் நெருப்பைப் பரவச் செய்த மாவீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் இன்று. நமக்குெல்லாம் உத்வேகம் தரும் அவரைப் போற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.