எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டு திமுக ஒருபோதும் அஞ்சாது என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளது. கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான நேருவைப் பழிவாங்கப் பார்க்கிறது.
மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல.எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

