இதுகுறித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ள அறிவிப்பின் படி. வருகிற நவம்பர் 15 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:20 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06001), மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் செல்லும். மறுமார்க்கத்தில் இரவு 7:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06002), 8:50 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் சென்றடையும்.
மேலும் மற்றும் ஒரு சிறப்பு ரயில் (06004), இரவு 9:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு இரவு 10:45 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் இரவு 11:30 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06003), நள்ளிரவு 12:45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
மேற்கண்ட ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லுார், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இச் சிறப்பு ரயில்கள் 10 பொதுப் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

