தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 2026 – 2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை, தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட முன்னாள் மாவட்ட நீதிபதி ஆ. ராமச்சந்திரன் நடத்தி வைத்தார்.

புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களாகப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைவராக ஜோ. ஜேசையா வில்வராயர், பொதுச் செயலாளராக ஜெ. பிரேம் பால் நாயகம், பொருளாளராக பி. பொன்குமரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், துணைத் தலைவர்கள் லி. சிசில் மச்சாது, ஜே. பிண்டோ வில்லவராயர், ஜோசப் காஸ்கரினோ, இணைச் செயலாளர்கள் டேவிட் ராஜா, க. தினேஷ், த. விசாகேஷ், நிர்வாகச் செயலாளர்: ச. பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்திற்கு புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் நகரின் முக்கியப் தொழில்முனைவோர்கள், வணிகப் பிரமுகர்கள் நேரில் சந்தித்தும் வாழ்த்துச் செய்திகள் மூலமும் தங்களது மனமார்ந்த பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.