தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை துறை சார்பில் பேரிடர் பெருஞ்சேத மாதிரி ஒத்திகை நிகழ்வு மருத்துவக் கண்காணிப்பாளர் பேராசிரியர் மருத்துவர் பத்மநாபன் தலைமையில் இன்று அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது. உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி முன்னிலை வகித்தார்.

தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினரின் முழு ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த ஒத்திகையில், அவசர சிகிச்சை துறைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் பாரத் வழிகாட்டுதலின்படி, அவசர சிகிச்சை துறை முதுநிலை மாணவர்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் எனச் சுமார் 50 பேர் கலந்துகொண்டு பேரிடர் காலத்தில் நோயாளிகளைக் கையாளுதல் மற்றும் அவசரச் சிகிச்சை அளிப்பது குறித்துச் செயல்முறை ஒத்திகை செய்து காட்டினர்.