தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள் & தகுதிகள் :
உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர் (1 பணியிடம்):
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (10+2+3 அல்லது 11+1+3 முறையில்) அறிவியல், கலை, வணிகவியல், பொறியியல் அல்லது மருத்துவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி: தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் (DOTE) நடத்தப்படும் 'Computer on Office Automation' சான்றிதழ் பெற்றவர்களுக்கோ அல்லது கணினி தொடர்பான பட்டயம் / பட்டம் முடித்தவர்களுக்கோ முன்னுரிமை வழங்கப்படும்.
தொகுப்பூதியம்: மாதம் ரூ.25,000/-
இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர் (1 பணியிடம்):
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொகுப்பூதியம்: மாதம் ரூ.20,000/-
அலுவலக உதவியாளர் (1 பணியிடம்):
கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொகுப்பூதியம்: மாதம் ₹13,000/-
வயது வரம்பு & பணி நிபந்தனைகள்:
அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்போரின் வயது 42-க்குள் இருக்க வேண்டும். இப்பணியிடங்கள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமான தொகுப்பூதிய அடிப்படையிலானவை ஆகும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://thoothukudi.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு' அலுவலகத்தில் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், உரிய கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் வரும் 29.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்வரும் முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்:
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
176, முத்துசுரபி கட்டிடம், மணிநகர்,
பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி மாவட்டம் - 628003.
தொலைபேசி எண்: 0461-2331188.
குறிப்பிட்ட காலக்கெடுவைக் கடந்து வரும் விண்ணப்பங்கள், முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

