தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியில், தேசிய விளையாட்டு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “Khelega Bharat, Jeetega Bharat” என்ற கருப்பொருளின் கீழ் ஆகஸ்ட் 28 முதல் 30ஆம் தேதி வரை பல்வேறு விளையாட்டு மற்றும் உடற்தகுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உடற்கல்வித் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் (Nளுளு) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், விளையாட்டு ஆர்வத்தை அதிகரித்தல், ஒழுக்கம், குழு உணர்வு மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் பல்வேறு விளையாட்டு மற்றும் உடற்தகுதி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சண்முகம் கலந்து கொண்டு, மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என வலியுறுத்தினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி உடற்கல்வி இயக்குநர்நடராஜன் ஒருங்கிணைத்தார்.

