வங்கக்கடலில் நிலவிய மோசமான வானிலை மற்றும் மீன்வளத் துறையின் எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த நவம்பர் 12-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், துறைமுகப் பகுதியில் 272 விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வானிலை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 11 நாட்களுக்குப் பிறகு இன்று அதிகாலை 5 மணி அளவில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுழற்சி முறையில் 210 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.