தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (திருநெல்வேலி கோட்டம்) சார்பில், 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம் வ.உ.சி நகர் திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குப் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

G+2 தளங்களைக் கொண்ட இத் திட்டப்பகுதியில், ஒவ்வொரு குடியிருப்பும் 408 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் படுக்கையறை, வசிப்பறை (ஹால்), சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளடங்கியுள்ளன. மேலும் திட்டப்பகுதியினுள் குடிநீர் வசதி, கழிவுநீர் வெளியேற்றும் வசதி, தெருவிளக்குகள் மற்றும் தார்ச்சாலை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நிதிப் பங்களிப்பு விவரம்:

ஒரு வீட்டின் மொத்த மதிப்பு ரூ. 12,15,314 ஆகும்.

மாநில அரசு மானியம்: ரூ. 7,00,000

ஒன்றிய அரசு மானியம்: ரூ. 1,50,000

பயனாளி பங்களிப்புத் தொகை: ரூ. 3,65,314

அரசு மானியங்கள் போக மீதமுள்ள பயனாளி பங்களிப்புத் தொகையான ரூ. 3,65,314-ஐ பயனாளி வாரியத்திற்குச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

பயனாளிக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சொந்த நிலமோ அல்லது வீடோ இருக்கக் கூடாது.

பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வருவாய் அலுவலர்கள் மூலம் கள ஆய்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன், பயனாளி பங்களிப்புத் தொகையான ரூ. 3,65,314-ஐ வங்கி வரைவோலையாகப் (DD) பெற்றுத் திருநெல்வேலி கோட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

வீடு ஒதுக்கீடு பெற விரும்பும் தகுதியுடைய நபர்கள் பின்வரும் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்:

உதவி நிர்வாகப் பொறியாளர் அலுவலகம்,

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,

தூத்துக்குடி உப கோட்டம்,

(பழைய தாலூகா அலுவலக வளாகம், மத்திய காவல் நிலையம் அருகில்),

தூத்துக்குடி – 628 001.

கைப்பேசி எண்: 9865957820