தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், திமுக தலைவர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கொச்சைப்படுத்திப் பேசியதாகக் கூறி, அவரைக் கண்டிக்கும் வகையில் தூத்துக்குடியில், வடக்கு மாவட்ட திமுக சார்பில் வி.வி.டி. சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வி. மார்க்கண்டேயன், கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகைய்யா, மாநகரச் செயலாளர் எஸ்.ஆர். ஆனந்த சேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மேலும், நிர்வாகிகள் முரளிதரன், அஜிதா ஆக்னல் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.பி. அசோக், மாநகர அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாநில பேச்சாளர் சரத் பாலா, மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், தூத்துக்குடி ஒன்றிய மத்திய திமுக செயலாளர் கே.கே.ஆர். ஜெயக்கொடி, தெற்கு மாவட்டம் சார்பில் உமரி சங்கர் ராமஜெயம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என். மதியழகன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகராட்சி மண்டலத் தலைவர் நிர்மல் ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், இசக்கி ராஜா, கீதா முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.