தூத்துக்குடி அருகே உள்ள கே. கைலாசபுரம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல் மகன் மகிழ்மணி (48) இவர் கடந்த 21ஆம் தேதி மோட்டார் பைக்கில் தூத்துக்குடியில் இருந்து கைலாசபுரத்திற்கு செல்லும் போது தட்டப்பாறை விலக்கு ரோட்டில் பைக் விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.