சவுதி அரேபியா மற்றும் ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நிலவி வரும் போர் தற்சமயம் மிகக் கடுமையான கட்டத்தை எட்டியுள்ளது. அதிநவீன ஏவுகணைத் தாக்குதல்கள் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்பதால், வான்வெளி மூடப்பட்டு விமானப் போக்குவரத்து திடீரென முடக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகப் பயப்படப்படுகிறது.

இதன் காரணமாக, சவுதி அரேபியா, துபாய் (ஐக்கிய அரபு அமீரகம்) உள்ளிட்ட 11 வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள், அமெரிக்கக் குடிமக்களுக்கு இந்த அவசரப் பயண எச்சரிக்கையைப் பிறப்பித்துள்ளன.

மேலும், ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புக்களால் அமெரிக்கக் குடிமக்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, வளைகுடா நாடுகளுக்கான பயணங்களை அமெரிக்கர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், ஏற்கனவே அங்குத் தங்கியிருக்கும் அமெரிக்கக் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.