வாரத்திற்கு 5 நாட்கள் வேலை மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைத் திட்டத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வங்கித் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நேரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வங்கித் தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன.
கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
செப்டம்பர் 28 முதல் 30 வரை: தொடர்ந்து 3 நாட்கள் வேலைநிறுத்தம்.
அக்டோபர் 26 முதல்: காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுத்துறை வங்கி அதிகாரிகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

