திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்திர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வருவாய் கோட்டாச்சியர் (திருநெல்வேலி) அலுவலகத்தில் 26.11.2026 அன்று மதியம் 03:00 மணிக்கு நடைப்பெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் திருநெல்வேலி வருவாய் கோட்டத்தை சார்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை-நகல், ருனுஐனு நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.