மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு நெல்லை, ராமேசுவரம், பழனி மற்றும் போடி ஆகிய நகரங்களில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1. நெல்லை - தென்காசி - ராஜபாளையம் - மதுரை வழித்தடம்:

ரயில் எண் 06001: நெல்லையிலிருந்து புதன்கிழமை மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு, மாலை 5:35 மணிக்கு மதுரை வந்தடைந்து, மாலை 6:30 மணிக்கு கூடல்நகர் சென்றடையும்.

ரயில் எண் 06002 (மறுமார்க்கம்): வியாழக்கிழமை மதியம் 12:15 மணிக்கு கூடல்நகரிலிருந்து புறப்பட்டு, மதியம் 12:30 மணிக்கு மதுரை வந்தடைந்து, மாலை 5:50 மணிக்கு நெல்லை சென்றடையும்.

நிற்கும் நிலையங்கள்: சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல், விருதுநகர், கள்ளிகுடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம்.

பெட்டிகள்: 17 பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்.

2. ராமேசுவரம் - மதுரை - பழனி வழித்தடம்:

ரயில் எண் 06780: ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை மாலை 4:55 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:45 மணிக்கு மதுரை வந்தடைந்து, இரவு 10:30 மணிக்கு பழனி சென்றடையும்.

ரயில் எண் 06779 (மறுமார்க்கம்): பழனியிலிருந்து வியாழக்கிழமை மதியம் 2:20 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:25 மணிக்கு மதுரை வந்தடைந்து, இரவு 8:10 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

நிற்கும் நிலையங்கள்: சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கறைப்பட்டி, திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம்.

3. போடி - மதுரை - கூடல்நகர் வழித்தடம்:

ரயில் எண் 06004: போடியிலிருந்து வியாழக்கிழமை பகல் 11:20 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12:45 மணிக்கு மதுரை வந்தடைந்து, மதியம் 1:30 மணிக்கு கூடல்நகர் சென்றடையும்.

ரயில் எண் 06003 (மறுமார்க்கம்): கூடல்நகரிலிருந்து வியாழக்கிழமை மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2:45 மணிக்கு மதுரை வந்தடைந்து, மாலை 4:30 மணிக்கு போடி சென்றடையும்.

நிற்கும் நிலையங்கள்: வடபழஞ்சி (நாகமலைபுதுக்கோட்டை), உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி.

பெட்டிகள்: 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்.