தூத்துக்குடி தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சேசு அய்யா மகன் செல்வம் (62). மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் மன வேதனையடைந்த அவர் லூர்தம்மாள்புரம் சுடுகாட்டில் மொட்டை போடும் இடத்தில் உள்ள ஹாஸ்பிட்டாஸ் சீட் கட்டையில் வைத்து நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.