திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்ததாகக் கூறி, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உருவ பொம்மையை வழக்கறிஞர்கள் நெல்லை நீதிமன்ற வாயிலில் இன்றுஎரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை நீதிமன்ற வாயிலில் இன்று திரண்ட வழக்கறிஞர்கள் குழுவினர், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினர். இது நீதிமன்ற அவமதிப்புச் செயல் எனத் தெரிவித்த அவர்கள், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் படத்தைச் செருப்பால் அடித்தும், அவரது உருவ பொம்மையை எரித்தும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தி, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்திப் போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். இச்சம்பவத்தால் நெல்லை நீதிமன்ற வளாக வாயிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.