விழாவிற்கு திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளித் தாளாளர் டேவின் சாலமோன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மெற்றில்டா ஜெசி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து மெஞ்ஞானபுரம் ஜான் தாமஸ் கல்வியியல் கல்லூரி சார்பில் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பின்னர் போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெஞ்ஞானபுரம் ஜான் தாமஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜெபசெல்வி அற்புதசீலி பரிசுகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் ஜான் தாமஸ் கல்வியியல் கல்லூரி தாளாளர் முனைவர் கரோலின் முதல்வர் ஜெபசெல்வி அற்புதசீலி மற்றும் பேராசிரியர்கள், செய்திருந்தனர்.

