திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் இயங்கி வரும் அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில், இதய சிகிச்சைத் துறை தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக NIRS - IVUS (Near-Infrared Spectroscopy - Intravascular Ultrasound) என்ற அதிநவீன இதய ரத்த நாள படமெடுக்கும் புதிய தொழில் நுட்பத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது.
இப்புதிய தொழில் நுட்ப சேவையை அருணா கார்டியாக் கேர் தலைவர் டாக்டர் E. அருணாச்சலம் மற்றும் நிர்வாக இயக்குநர் A. ஸ்வர்ணலதா அருணாச்சலம் தம்பதியினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்விழாவில் பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக எழுந்தருளி, திருவிளக்கு ஏற்றி புதிய சாதனத்தைத் திறந்து வைத்து ஆசி வழங்கினார்.
இந்நிகழ்வில் அருணா கார்டியாக் கேர் முதன்மைச் செயல் அலுவலர் ராமன், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முன்னாள் பேராசிரியரும், திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பேராசிரியருமான மீ. முருகலிங்கம், தாமிரவருணி தமிழ் வனம் அமைப்பின் தலைவர் A.R. லெட்சுமணன் மற்றும் மருத்துவமனையின் இதயவியல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

