தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளையை சேர்ந்தவர் ராமசாமி மகன் சொரிமுத்து(30). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பேட்டரி கார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று திருச்செந்தூருக்கு பைக்கில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

குரும்பூர் அடுத்த சேதுக்குவாய்தான் புதுநகர் பகுதியில் வளைவில் திரும்பும்போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் செல்லும் பகுதியில் எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரும்பூர் போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.