தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கிட்டு மகன் சந்தனகுமார் (39). இவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சந்தனகுமார் அதிகளவில் மது மற்றும் கஞ்சா பயன்படுத்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகக் கடந்த 5 ஆண்டுகளாக மனைவியையும் குழந்தையையும் பிரிந்து, தனது தாயார் ஜக்கம்மாளுடன் தனியாக வசித்து வந்தார்.
சந்தனகுமாரின் தாயார் ஜக்கம்மாள் வீட்டருகே உள்ள கோவிலுக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சந்தனகுமார், வீட்டின் மின்விசிறியில் போர்வையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார், சந்தனகுமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

