சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அண்மையில் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவுவதுடன், அக்டோபர் 17-ம் தேதி வரை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியத் தூதரகத்தின் அறிவுறுத்தல்கள்:
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் கீழ்க்கண்ட முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது:
• சவுதியில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள், கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகளின் விமான நிலையங்களில் இருந்து கிடைக்கும் விமானங்களைப் பயன்படுத்தி வெளியேறலாம்.
• சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணமாகச் சவுதி அரேபியா சென்றுள்ள இந்தியர்கள், விமானங்கள் கிடைக்காத காரணத்தினால் விசா காலத்தைக் கடந்தாலும், அபராதம் ஏதும் விதிக்கப்படாமல் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.
உதவி எண்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை:
சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தூதரகம் சார்பில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன:
• ரியாத் தூதரகம்: +966-554412016, +966-542126784 | கட்டணமில்லா எண்: 8002471234 | வாட்ஸ்அப்: +966-536216082 | மின்னஞ்சல்: cw.riyadh@mea.gov.in
• ஜெட்டா துணைத் தூதரகம்: +966-12-2614093, +966-556122301 | வாட்ஸ்அப்: +966-536209704 | மின்னஞ்சல்: pbskcgi@gmail.com
• சமூக வலைதளங்கள்: எக்ஸ் (@IndianEmbRiyadh), ஃபேஸ்புக் (Indiain Saudi Arabia), இன்ஸ்டாகிராம் (indianembriyadh) ஆகிய தூதரகங்கள் மூலமாகவும் உதவி கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

