இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 02.09.2026 அன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு குறைகள் நிவர்த்தி செய்திட தங்களது மனுக்கள் இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து தொலைபேசி எண் குறிப்பிட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநரை (முன்னாள் படைவீரர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம்) தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.