கடந்த 7 ஆண்டுகளாக கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொட்டலூரணி கிராம மக்கள் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி இயங்கி வரும் மூன்று கழிவுமீன் நிறுவனங்களில் இருந்து வரும் துர்நாற்றத்தால் பெரும் அவதிப்பட்டு வரும் கிராம மக்கள் அதிமுக., திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியும் பல வழக்குகளைப் பெற்றும் விடை கிடைக்காமல் போராடி வருகிறோம்.
இந்த நிறுவனங்களால் காற்று மட்டுமல்ல, நீர்நிலைகளும், நிலத்தடி நீரும் பாதிப்படைகின்றன. சில நேரங்களில் இந்த நிறுவனங்களில் இருந்து வரும் துர்நாற்றம் மூச்சு அடைபடும் நிலைக்கு ஆகிறது.
எனவே புதிதாக அமைந்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, நாங்கள் சுத்தமான காற்றைச் சுவாசிக்க உதவி செய்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் வகையில் மூன்று கழிவுமீன் நிறுவனங்களையும் மூட உத்தரவிடவேண்டும் என்றும், சுதந்திர நாட்டில் சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் என்றும் எங்கள் கடந்த 800 நாள் போராட்டத்தை மீண்டும் முதலில் இருந்து தொடங்கி காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

