பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகளைத் திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மற்றும் கோவில்பட்டி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் நீல் ஷர்மா தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு, விழாக் காலத்தில் பின்பற்ற வேண்டிய உரிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களைத் சரகக் காவல் துணைத் தலைவர் வழங்கினார்.

