தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் இன்று அதிகாலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, மாதவன் நாயர் காலனி பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை போலீசார், சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில், அவர் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நட்டார் என்பவரின் மகன் கணேசன் (40) என்பது தெரியவந்தது.
இவர் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மொத்தமாகப் பாட்டில்களை வாங்கி வந்து, அதிகாலையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 40 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

