தூத்துக்குடி மீன்பிடி துறைமுக முன்னாள் தொழிலாளர் சங்கத் தலைவர் பார்த்திபன் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையில், மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.