தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18.09.2026), கோயம்புத்தூரில் நடைபெற்ற 5வது மாநில அளவிலான செவித்திறன் குறைபாடுடையோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தூத்துக்குடி குட் ஷெப்பர்ட் பள்ளி மாணவர்கள் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.
கோயம்புத்தூர் நேரு விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 10 முதல் 12 வரை நடைபெற்ற 5வது தமிழ்நாடு மாநில அளவிலான செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் விளையாட்டுப் போட்டிகளில் தூத்துக்குடி பையன்ட் நகர் 3வது தெருவில் இயங்கி வரும் குட் ஷெப்பர்ட் பள்ளி மாணவர்கள், மாணவர் அருள்பிரகாஷ் உயரம் தாண்டுதல் (1.40மீ),
மாணவி சுமித்ரா 800 மீ ஓட்டம் (4:22.54 வினாடிகள்) முதல் இடம் தங்கப் பதக்கம், மாணவர் ஜெர்வின் உயரம் தாண்டுதல் (1.30 மீ) இரண்டாம் இடம் வெள்ளிப் பதக்கம், மாணவி கலையரசி உயரம் தாண்டுதல் (0.90 மீ), மாணவர் ஜெர்வின் குண்டு எறிதல் (7.84 மீ), மாணவி இந்திராணி 800 மீ ஓட்டம் (5:52.38 வினாடிகள்) வெண்கலப் பதக்கம் மூன்றாம் இடம் ஒட்டுமொத்தமாக (2 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்) பெற்றனர்.

பதக்கம் வென்ற மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். இந்நிகழ்வில் மாநில மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் மெய்கண்டன் மற்றும் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.

