தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் நாளை (அக். 16) நடைபெறவுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு, நினைவிடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அங்குப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள காவல் துறையினரின் பாதுகாப்புப் பணிகள் குறித்துக் கேட்டறிந்ததுடன், விழா அமைதியான முறையில் நடைபெறவும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீராக இருக்கவும் உரிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மற்றும் கோவில்பட்டி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் நீல் சர்மா உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.