தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கரன்குமார் (26). இவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பதிவான கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இதேபோல், கரன்குமாரின் சகோதரரான கற்பகமூர்த்தி (28) என்பவர் அதே காவல் நிலையத்தில் பதிவான கஞ்சா வழக்கில் தொடர்புடையவராவார்.
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சகோதரர்கள் இருவர் மீதும் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.
காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் பிறப்பித்த உத்தரவின்பேரில், கரன்குமார் மற்றும் கற்பகமூர்த்தி ஆகிய இருவரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இருவரும் நேற்று (நவம்பர் 23) பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

