திருநெல்வேலியின் அறிமுகவுரை (1 of 1)

திருநெல்வேலி மாநகராட்சி தென் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தெற்குப் பகுதி மாவட்டமான திருநெல்வேலியின் நகர் பகுதியாகும். இது 1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. திருச்சி, சேலம் ஆகியவை திருநெல்வேலி மாநகராட்சியின் வயதை ஒத்தவை.

திருநெல்வேலி மாநகராட்சி பல சிறப்புகளுக்குப் பெயர் கொண்ட மாநகராட்சிப் பகுதியாகும். இந்த மாவட்டத்தில் தான் பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சி நாதன் மற்றும் விடுதலை புரட்சியாளர்களான வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா மற்றும் பலரின் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது.

டிவிஎஸ் சுந்தரம், சிம்சன், ஏசான், இந்தியா சிமென்ட்ஸ்பல தொழிலதிபர்களும் இம்மாவட்டத்தையே பிறப்பிடமாக கொண்டுள்ளனர்.திருநெல்வேலி அல்வாத் தயாரிப்புக்கு பிரசித்திப் பெற்ற இடமாகும். இதன் இது அல்வா நகரம் என்ற இடுகுறிப் பெயருடன் விளங்குகின்றது.

இம்மாநகராட்சி மூன்றுப் பெரிய நகராட்சிகளை ஒன்றிணைக்கின்றது. அதாவது திருநெல்வேலி, பாளயங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மற்றும் இதர ஊராட்சிகளையும் இணைக்கின்றது.


Favorite tags



Tirunelveli Business Directory