திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (1 of 53)
வெள்ளிவிழா கண்ட முத்தாலங்குறிச்சி காமராசு
தாமிரபரணி வரலாற்றை மிக எளிய தமிழில் எழுதி வருபவர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முத்தாலங்குறிச்சி கிராமத்தில் சங்கரசுப்பு -சொர்ணம்மாள் தம்பதியருக்கு 8 -10 -1966ல் மகனாக பிறந்தார். தற்போது செய்துங்கநல்லூரில் வசித்து வருகிறார். திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பொன் சொர்ணா என்ற ஸ்டூடியோ மற்றும் பதிப்பகம் நடத்தி வருகிறார்.
கடந்த 1987ல் எழுத் தொடங்கியவர் 25 ஆண்டுகளாக எழுதி தற்போது வெள்ளிவிழா கண்டுள்ளார். இதுவரை 25நூல்கள் எழுதியுள்ளார். இவை அனைத்தும் நெல்லை -தூத்துக்குடி மாவட்டங்களை பற்றியதாகும். தாமிரபரணி நதி பற்றி "தலை தாமிரபரணி" என்ற பெயரில் 950 பக்கத்தில் காவியா பதிப்பகம் மூலம் புத்தகம் வெளியிட்டுள்ளார். தற்போது, நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தைப்பற்றி தென்பாண்டி சீமையிலே என்ற பெயரில் மிகப்பெரிய புத்தகம் எழுதி வெளியிட உள்ளார்.
பிரபல பத்திரிக்கை பிரசுரமான விகடன் பிரசுரத்தில் சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முத்தாலங்குறிச்சி காமராசை மனமார வாழ்த்துவோம்.
செல்வோம் தாமிரபரணிக்கு....