தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட POCSO வழக்கு ஒன்றில், குற்றவாளிக்கு நீதிமன்றம் மூலம் 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத் தருவதற்கு முக்கியக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றவாளிக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தரும் வகையில் மிகச் சிறப்பாகப் புலனாய்வுப் பணியை மேற்கொண்ட மாசார்பட்டி காவல் ஆய்வாளர் ம.அனிதா மற்றும் நீதிமன்றப் பணிகளைத் திறம்படக் கையாண்ட தலைமைக் காவலர் ச.பாண்டிச் செல்வி ஆகியோரின் சேவையைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் இரா.திருநாவுக்கரசு, இன்று (15.10.2026) அவர்களைத் தனது சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.

