நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா திருத்தேரோட்டம்

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா திருத்தேரோட்டம்
பதிவு செய்த நாள் செவ்வாய் 12, ஜூலை 2011
நேரம் 5:29:19 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. அரஹர மகாதேவா கோஷத்துடன் நெல்லையப்பர் தேர் சரியாக காலை 8 மணிக்கு நிலையத்தில் இருந்து ரதவீதிக்குள் சென்றது. நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேக ஆதராதனைகளை தொடர்ந்து அதிகாலை 4.21 மணிக்கு சுவாமி, அம்பாள் தேர் எழுந்தருளும் வைபவம் நடந்தது. தொடர்ந்து காலை 7.47க்கு தேர் புறப்படும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையி்ல் அதிகாலை முதலே ரதவீதிகளின் பக்தர்கள் குவிந்தனர்.Tirunelveli Business Directory