குற்றாலத்தில் களைகட்டிய சீசன்

குற்றாலத்தில் களைகட்டிய சீசன்
பதிவு செய்த நாள் ஞாயிறு 17, ஜூலை 2011
நேரம் 8:42:40 PM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதையடுத்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். குற்றாலத்தில் சாரல் நன்றாக உள்ளது. இதமான காற்று வீசுகிறது. அவ்வப்போது மேகக்கூட்டம் திரண்டு வந்து மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டு தாலாட்டிச்செல்கிறது. மலை முழுவதும் பச்சை பசேல் என்று போர்வை போர்த்தியது போன்று கண்ணுக்கு விருந்தளிப்பதாக உள்ளது. தொடர் சாரல் காரண மாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் அருமையாக விழுகிறது. சிறுவர்கள் குளித்து மகிழும் புலியருவி, இயற்கை ஆர்வலர்கள் அதிகளவில் விரும்பும் பழைய குற்றால அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. 20 தினங்களுக்கு பிறகு சீசன் மீண்டும் களைகட்டியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது.Tirunelveli Business Directory