குட்டீஸ்களின் கலக்கல் கலைநிகழ்ச்சி

குட்டீஸ்களின் கலக்கல் கலைநிகழ்ச்சி
பதிவு செய்த நாள் திங்கள் 22, ஆகஸ்ட் 2011
நேரம் 6:00:37 PM (IST)

வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள செயிண்ட் சேவியர்ஸ் மெட்ரிக் பள்ளியில் 23ம் ஆண்டு விழா நடந்தது.ஸ்காட் கல்வி நிறுவனங்களின் தலைவர் கிளீட்டஸ்பாபு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அமலி கிளீட்டஸ் பாபு முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் மெனாண்டஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஸ்காட் கல்வி நிறுவனங்களின் தலைவர் கிளீட்டஸ் பாபு பேசுகையில்.,ஏழை எளிய மாணவர்களும் கல்வியினை பெற்றிடும் வகையில் ஸ்காட் கல்வி நிறுவனம் வாய்ப்புகளை வழங்கி வருகிறது, மாணவர்களின் உயர்விற்கு ஆசிரியர்கள் மட்டும் காரணம் அல்ல,மாணவர்களின் ஒத்துழை ப்பும் அவர்களது கடின உழைப்பும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது, மாணவர்களின் பெற்றோர்களும் கல்வி நிறுவனத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, மேற்கத்திய நடனங்கள், ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனங்கள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.Tirunelveli Business Directory