நெல்லையில் நடிகை பூர்ணா

நெல்லையில் நடிகை பூர்ணா
பதிவு செய்த நாள் சனி 3, டிசம்பர் 2011
நேரம் 8:22:50 PM (IST)

நெல்லை ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் 4ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை பூர்ணா மற்றும் நெலலை மாநகராட்சியின் மேயர் ,துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர். உலக அளவில் வாடிக்கையாளர்கள் தங்களது பட்ஜெட்டிற்கு ஏற்றாற் போல் தங்களுக்கு தேவையான தங்கம் மற்றும் வைர நகைகளை தேர்ந்தெடுக்கும் வகையில் விதவிதமான விலைகளில் புதுமையான நகை கலென்ஷன்கள் உருவாக்குவதிலும், சலுகைகள் தருவதிலும் சிறப்பு கவனம் செலுத்தும் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் நெல்லை ஷோரூம் நெல்லை சுவாமி சன்னதி தெருவில் கடந்த 2007ம் ஆண்டு திறக்கப்பட்டது. மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி இன்று தனது 4ம் ஆண்டை நிறைவு செய்து 5ம் ஆண்டில் காலடி வைக்கிறது , இதற்காக இன்று காலை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நெல்லை மாநகர மேயர் விஜிலா சத்யானந்த், துணை மேயர் ஜெகநாதன், ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக கந்தக்கோட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபல நடிகை பூர்ணா கலந்து கொண்டார்.Tirunelveli Business Directory