தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்

தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்
பதிவு செய்த நாள் வெள்ளி 20, ஜனவரி 2017
நேரம் 1:00:12 PM (IST)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று 4வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி தூத்துக்குடியில் வாட்ஸ்அப் மூலம் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள, மாணவிகள் கடந்த 3 நாட்களாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி மைதானம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்ற‌னர்.Tirunelveli Business Directory