அணுஉலையில் யுரேனியம் நிரப்ப எதிர்ப்பு: கடலுக்குள் இறங்கி நூதன போராட்டம்!!

அணுஉலையில் யுரேனியம் நிரப்ப எதிர்ப்பு: கடலுக்குள் இறங்கி நூதன போராட்டம்!!
பதிவு செய்த நாள் வியாழன் 13, செப்டம்பர் 2012
நேரம் 5:25:53 PM (IST)

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்த வலியுறுத்தியும், போராட்டக்காரர்கள் மீதான தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் கூடங்குளம் போராட்டக் குழு மற்றும் ஏராளமான கிராம மக்கள் இன்று கடலில் இறங்கி போராடி வருகின்றனர். சுமார் 3,000த்துக்கும் மேற்பட்டவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களும், குழந்தைகளும் கூட இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.



Tirunelveli Business Directory