முருகதாஸ் தம்பியின் ஹீராயினாக வத்திக்குச்சி படத்தில் அஞ்சலி
பதிவு செய்த நாள் | வெள்ளி 15, மார்ச் 2013 |
---|---|
நேரம் | 12:58:37 PM (IST) |
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன் நாயகனாக அறிமுகமாகும் வத்திக்குச்சி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். எங்கேயும் எப்போதும் படத்திற்கு பின்பு, அஞ்சலியின் மார்க்கெட் உயர்ந்து விட்டது. பெரிய இயக்குநர்கள், பெரிய பட நிறுவனங்கள் என்றால் மட்டுமே உடனே நடிக்க வந்து விடுகிறார் அஞ்சலி. இந்நிலையில் தனக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த எங்கேயும் எப்போதும் படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கேட்டுக் கொண்டதற்காக அவருடைய தம்பி திலீபன் நாயகனாக அறிமுகமாகும் வத்திக்குச்சி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொடுத்துள்ளாராம்.