கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் பட ஸ்டில்ஸ்

கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் பட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் ஞாயிறு 21, செப்டம்பர் 2014
நேரம் 11:59:44 AM (IST)

கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படம் செப்டம்பர் 26ம் தேதி ரீலிஸ் ஆகிற்து. ஸ்டுடியோ கீரின் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு அவர் இப்படத்தில் வடசென்னை வாலிபராக நடிக்கிறார். படத்தில் அவருக்கு ஜோசியாக கேத்தரீன் என்ற‌ புதுமுக நடிகை அறிமுகமாகிறார் தமிழிலிருந்து ஆர்யா, ஸ்ரீகாந்த், ஷாம் போன்ற நடிகர்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர். அதுபோல் டோலிவுட் நடிகர்கள் சிலரும் நேரடி தமிழ் படங்களில் நடிக்கின்றனர்.இது பற்றி கார்த்தி, விஷால் கூறும்போது, வாய்ப்பு கிடைக்கும்போது நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பதாக கூறியிருந்தனர். அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது.டோலிவுட் இயக்குனர் வம்சி, டபுள் ஹீரோ ஸ்கிரிப்ட் ரெடி செய்திருக்கிறார். இதில் நடிக்க கேட்டு நாகார்ஜுனா, ஜுனியர் என்டிஆர் ஆகியோரை அணுகினார். கதை கேட்ட பிறகு இருவரும் நடிப்பதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் திடீரென்று அப்படத்தில் நடிக்காமல் விலகி இருக்கிறார் ஜுனியர் என்டிஆர். இதற்கு என்ன காரணம் என்பது சரியாக தெரியவில்லையாம். அவருக்கு பதிலாக கார்த்தியை நடிக்க கேட்டிருக்கிறார். நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்த கார்த்திக்கு இப்படியொரு வாய்ப்பு வந்திருப்பதால் அதை ஏற்க முடிவு செய்திருக்கிறாராம்.



Tirunelveli Business Directory