அஜித்தின் 55 பட ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்

அஜித்தின் 55 பட ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் செவ்வாய் 14, அக்டோபர் 2014
நேரம் 8:30:57 PM (IST)

அஜீத் படத்துக்கு டைட்டில் முடிவாகியும் வெளியிடாமல் மவுனம் காக்கிறார் இயக்குனர். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவரை வெளியிடப்படவில்லை. தல 55 என்ற தற்காலிக தலைப்புடன் ஷூட்டிங் நடந்து வருகிறது. 75 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தற்போது கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அஜீத், அருண் விஜய் மோதும் சண்டை காட்சி படமாகிறது. இதுவரை பட தலைப்பு வெளியிடாதது ஏன் என்றபோது, படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் வெளியிடாமல் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும். ஆயுதபூஜையன்று தலைப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. தீபாவளியன்றோ அதற்கு முன்னதாகவோ தலைப்பு வெளியிடப்படலாம் என்கின்றனர். ஏற்கனவே இப்படத்துக்கு ஆயிரம் தோட்டாக்கள் அல்லது சத்யா என பெயரிடப்பட இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை. சூடு ஆறுவதற்குள் தலைப்பு வெளியிட்டால் நல்லது என்று சிலர் தெரிவிக்கின்றனர்.



Tirunelveli Business Directory