லிங்கா பட ஆடியோ ரிலீஸ் ஸ்டில்ஸ்

லிங்கா பட ஆடியோ ரிலீஸ் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் திங்கள் 17, நவம்பர் 2014
நேரம் 8:21:23 PM (IST)

ரஜினி இருவேடங்களில் நடிக்கும் படம் லிங்கா. நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி ரஜினி பிறந்தநாளில் இப்படம் வெளியாகிறது. லிங்கா படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. பாடல் சி.டி.யை ரஜினி வெளியிட படத்தில் நடித்த இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பெற்றுக்கொண்டனர். விழாவில் டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், எஸ்.பி.முத்துராமன், படத்தின் கதாநாயகிகள் அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா, நடிகர் கள் விஜயகுமார், சந்தானம், சுதீப், ஜெகபதி பாபு, தயாரிப்பாளர் ராக் லைன் வெங்கடேஷ், ஒளிப்பதிவாளர் ரத்தின வேலு, ரஜினி மனைவி லதா, மகள் சவுந்தர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tirunelveli Business Directory