தீபாவளிப் பண்டிகைக் காலப் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்துத் தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி சனிக்கிழமை தோறும் தாம்பரத்தில் இருந்து போடி செல்லும் ரயில் வண்டி எண் 06059 நவம்பர் 14 வரையும், ஞாயிறுதோறும் போடியிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில் வண்டி எண் 06060 நவம்பர் 15 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வியாழன் தோறும் திருநெல்வேலியிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில் வண்டி எண் 06070 நவம்பர் 12 வரையும், வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரயில் வண்டி எண் 06069 நவம்பர் 13 வரை நீட்டிக்கப்படுகிறது.

புதன்கிழமை திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் வண்டி எண் 06110 நவம்பர் 11 வரையிலும், வியாழக்கிழமை தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் ரயில் வண்டி எண் 06109 நவம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

வெள்ளிக்கிழமை தோறும் எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் வண்டி எண் 06045 நவம்பர் 13 வரையும், ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரியிலிருந்து எழும்பூர் செல்லும் ரயில் வண்டி எண் 06046 நவம்பர் 15 வரையும் நீட்டிக்கப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று முதல் நடைபெற்று வருகிறது.