தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் பாராநெஸ்ட் திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த க. மாணிக்கவாசகம் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வட்டார ஊராட்சி), அங்குப் பணியாற்றிய த. சரவண குமார் புதூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜ. பி. வாவா முஹைதீன் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கிருந்த ஜெ. ஜவஹர் தூத்துக்குடி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் பணியாற்றிய தி. ரமேஷ் சாத்தான்குளம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்குப் பணியாற்றிய எஸ். ஏ. பால முருகன் சாத்தான்குளம் வட்டார ஊராட்சியின் பிடிஓ-வாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் வி. வெங்கடாசலம் கருங்குளத்திற்கும், கருங்குளத்தில் பணியாற்றிய க. சுடலை உடன்குடி கிராம ஊராட்சிக் BDO-வாகவும், உடன்குடியில் பணியாற்றிய பி. பாலசுப்பிரமணியன் அதே வட்டாரத்தில் வட்டார ஊராட்சியின் பிடிஓ-வாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உடன்குடி பிடிஓ-வாக இருந்த ந. பழனிச்சாமி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், கோவில்பட்டியில் கிராம ஊராட்சி பிடிஓ-வாக இருந்த ஜோ. சுப்பரத்தினம் அதே வட்டாரத்தில் வட்டார ஊராட்சி பிடிஓ-வாகவும், அங்குப் பணியாற்றிய இரா. சிவகுமார் கிராம ஊராட்சி பிடிஓ-வாகவும் சுழற்சி முறையில் மாற்றப்பட்டுள்ளனர்.
விளாத்திகுளம் பிடிஓ பி.தினகரன் தூத்துக்குடி வட்டார ஊராட்சிக்கும், தூத்துக்குடியில் பணியாற்றிய பி. மரியம்மாள் கெரென் வளமதி விளாத்திகுளம் கிராம ஊராட்சி பிடிஓ -வாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலர்கள் அனைவரும் 01.10.2026 பிற்பகல் முதல் விடுவிக்கப்படுகிறார்கள். இவர்கள் உடனடியாகத் தங்களின் புதிய பணியிடங்களில் பொறுப்பேற்க வேண்டும் எனவும், இதில் எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் ஆட்சியர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

