தூத்துக்குடி புதிய துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கடாசலப் பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசிச் சனிக்கிழமை விழாவையொட்டி, அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டுத் திருப்பள்ளி எழுச்சி மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, வருகை தந்த பக்தர்களுக்குத் திருவாராதனம் மற்றும் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வழிபாடுகள் தொடங்கின.காலை 7 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அருள்மிகு வெங்கடேஸ்வரப் பெருமாளுக்குச் சிறப்புத் திருமஞ்சன சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த வெங்கடேஸ்வரப் பெருமாளைத் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வணங்கி வழிபட்டனர்.

இச்சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோயில் பாஷ்யம் ஐயங்கார், சடகோபன் மற்றும் கோயில் நிர்வாகிகள் அரவிந்த்சாமி, ஆறுமுகம், செந்தில் கணேஷ், மணிகண்டன் உள்ளிட்ட விழாக்குழுவினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.